விஜய்யின் தெறி படம் செய்த மற்றோரு மாபெரும் சாதனை


சமூக வலைத்தளங்களில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் விஜய். அவரது படம் மற்றும் படத்தின் டீஸர் வெளியாகும் போது விஜய் ரசிகர்கள் நிச்சயம் ஒரு சாதனையை நிகழ்த்துவது வழக்கம்.

இதுவரை தமிழில் மட்டும் சாதனை படைத்த விஜய் படங்கள் தற்போது ஹிந்தியிலும் சாதனை படைக்க தொடங்கியுள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த தெறி படத்தின் ஹிந்தி டப்பிங் படத்தை இது வரை 5 கோடிக்கு மேற்பட்டோர் யூ-டியூப் ல் பார்த்துள்ளனர்.  

இதுவரை வெளியான தமிழ் டப்பிங் படங்களில் இதுவே அதிக முறை பார்க்கப்பட்ட படமாக திகழ்கிறது. தற்போது விஜய் முருகதாஸ் இயக்கத்தில் புதிய பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார்.