வைரலாகும் துருவ நட்சத்திரம் விக்ரமின் சால்ட் & பெப்பர் லுக்


நடிகர் விக்ரம் ஸ்கெட்ச் படத்தை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் துருவநட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார். கெளதம் மேனன் ஒரே நேரத்தில் துருவ நட்சத்திரம் மற்றும் என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களை உருவாக்கி வருகிறார்.

துருவ நட்சத்திரம் படம் தொடங்கிய உடனேயே அதன் டீஸர் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் என்ற தகவலை கெளதம் மேனன் உறுதி படுத்தியிருந்தார்.

இந்த படத்தில் ரித்து வர்மா,ஐஸ்வர்யா ராஜேஷ்,ராதிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் விக்ரமின் சால்ட் &பெப்பர் லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.