விஷ்ணு விஷால் ஷிவானி இணையும் புதிய படம்


விஷ்ணு விஷால் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக நடிகை ஜீவிதாவின் மகள் ஷிவானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் மூலம் ஷிவானி தமிழில் அறிமுகம் ஆகிறார்.

விஷ்ணு விஷால் தற்போது 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', 'ராட்சஸன்', 'ஜெகஜால கில்லாடி' ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவற்றை தொடர்ந்து புதுமுக இயக்குநர் வெங்கடேஷ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். 

இப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கவுள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராக.  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. இசையமைப்பாளராக க்ரிஷ் அறிமுகமாகவுள்ளார்.