ரசிகர் மன்றத்தை விரிவுபடுத்த விஜய் திட்டம்: அரசியலுக்கு தயாராகிறாரா ?


நடிகர்கள் ரஜினி,கமல் இருவரும் அரசியலில் இறங்கிவிட்டனர். இருவரும் ரசிகர் மன்றத்தை விரிவுபடுத்த இணையதளம், மொபைல் ஆப் போன்றவற்றை அறிமுகப்படுத்தி ரசிகர்களை சேர்த்து வருகின்றனர்.

அந்த வரிசையில் நடிகர் விஜய்யும் சேர்ந்துள்ளார். ரசிகர்மன்றத்தை விரிவுபடுத்த விஜய்யும் இணையதளம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய் தனது படங்களில் சமூக கருத்துக்களை கூறுவதாலும், அவ்வப்போது அரசியல் பேசுவதாலும் அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் விஜய்யின் இந்த முடிவு அவர் அரசியலுக்கு வருவார் என்பதை உறுதிப்படுத்துகிறது.