நடிகை அமலா பாலுக்கு விஷால் பாராட்டு


தமிழில் மைனா படம் மூலம் பிரபல நடிகையான அமலா பால் விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். சென்னையில் உள்ள ஒரு நடனப்பள்ளியில் நடன பயிற்சி செய்யும் போது ஒருவர் பாலியல் தொல்லை தரும் விதத்தில் பேசியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகார் அளித்ததையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவர் தைரியமாக புகார் அளித்ததற்காக அவரின் தைரியத்தை நடிகர் விஷால் பாராட்டினார்.

சமீபத்தில் சொகுசு கார் வரி ஏய்ப்பு வழக்கில் நடிகை அமலாபால் கேரளா போலீசால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.