பூஜையுடன் தொடங்கியது ஜீவா நடிக்கும் 'கொரில்லா' திரைப்படம்


நடிகர் ஜீவா தற்போது கலகலப்பு 2ஆம் பாகத்தில் நடித்து வந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அவர் தனது அடுத்த படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை டான் சாண்டி இயக்குகிறார். இந்த படத்தில் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த ஷாலினி பாண்டே, சதிஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு கொரில்லா என பெயர் சூட்டியுள்ளனர்.

சி.எஸ்.சாம் இசையமைக்கும் இந்த படத்தை ஆல் இன் பிச்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படம் முழு நீல காமெடி படமாக உருவாகிறது. இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த படத்தில் காங் எனப்படும் சிம்பன்சி குரங்கு ஒன்று நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.