பாகமதி படத்திற்காக அனுஷ்காவை பாராட்டிய ரஜினிகாந்த்


பாகுபலி படத்தை தொடர்ந்து அனுஷ்கா நடிக்கும் படம் பாகமதி. தெலுங்கு தமிழ் ஆகிய இரு மொழிகளில் தயாராகிவரும் இந்த படம் வரும் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி வெளியானது.

அருந்ததி படம் போன்று கதாநாயகியை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.  தமிழில் இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது.

வித்யாசமான கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்திருக்கும் இப்படத்தை பலரும் பாராட்டினர். தற்போது நடிகர் ரஜினிகாந்தும் இந்த படத்தை பாராட்டியுள்ளார். நடிகை அனுஷ்காவை போனில் தொடர்பு கொண்டு பேசிய ரஜினிகாந்த் அனுஷ்காவின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார்.