படவாய்ப்பு இல்லாததால் கவர்ச்சியில் இறங்கிய நடிகை சதா


ஜெயம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சதா. முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார். அதன் பிறகு உன்னாலே உன்னாலே, ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக அந்நியன் போன்ற படங்களில் நடித்தார். பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தார்.

தற்போது அவர் டார்ச் லைட் என்ற படத்தில் நடித்துவருகிறார் . அப்துல் மஜீத் இயக்கும் இந்த படம் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. உண்மை கதையை மையமாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் சதா பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார்.

இந்த படத்தில் சதாவின் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியாகின. அது மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் சதா கவர்ச்சி படங்களை வெளியிடுகிறார்.