மீண்டும் போலீசாக நடிக்கிறாரா அஜித்? வெளிவந்த தகவல்


அஜித் நடிப்பில் 'சிறுத்தை ' சிவா இயக்கிய படம் விவேகம். இந்த படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெறாவிட்டாலும் நல்ல வசூலை பெற்றது. இந்நிலையில் அஜித் இயக்குனர் சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார். 

இந்த படத்திற்கு விசுவாசம் என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது.தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டு பின்பு விலகினார்.  

இந்த படத்தில் நடிகர் அஜித் வடசென்னையில் இருக்கும் ஒரு இளம் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதற்கு முன்பு அஜித் என்னை அறிந்தால் படத்தில் போலீசாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.