ரஜினி கமல் விஜயை தொடர்ந்து நடிகர் சிம்புவும் அரசியலுக்கு வருகிறாரா ? டி.ஆர் பதில்


நடிகர்கள் ரஜினி,கமல் இருவரும் அரசியலில் இறங்கிவிட்டனர். இருவரும் ரசிகர் மன்றத்தை விரிவுபடுத்த இணையதளம், மொபைல் ஆப் போன்றவற்றை அறிமுகப்படுத்தி ரசிகர்களை சேர்த்து வருகின்றனர்.

அந்த வரிசையில் நடிகர் விஜய்யும் சேர்ந்துள்ளார். ரசிகர்மன்றத்தை விரிவுபடுத்த விஜய்யும் இணையதளம் தொடங்கி ரசிகர்களை சேர்த்து வருகிறார்.

தற்போது நடிகர் சிம்புவும் அரசியலில் இறங்கவிருப்பதாக தெரிகிறது. அவரும் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இது பற்றி பதிலளித்த அவரின் தந்த டி.ஆர், 'ரசிகர்களை கூட்ட போகிறோம் பொறுத்திருந்து பாருங்கள்' என்று கூறினார்.