'சங்கிலி புங்கிலி கதவ தொற' இயக்குனருடன் மீண்டும் இணையும் ஜீவா


கலகலப்பு 2படத்தை தொடர்ந்து 'சங்கிலி புங்கிலி கதவ தொற' இயக்குனருடன் மீண்டும் இணையவுள்ளார் நடிகர் ஜீவா.

ஐக் ராதா இயக்கத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ’சங்கிலி புங்கிலி கதவதொற’. இயக்குனர் அட்லீ மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம்  இணைந்து தயாரித்த இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட்டது. 

இந்த படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஜக் ராதா இயக்கத்தில் மீண்டும் ஜீவா நடிக்கவுள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.