சாய் பல்லவி மீது 'கரு' பட ஹீரோ பரபரப்பு புகார்


மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. அந்த படத்தின் தமிழ் பெண்ணாக மலர் டீச்சர் கேரக்டரில் நடித்த சாய் பல்லவிக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.

அவர் தற்போது தெலுங்கு தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்துவருகிறார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள கரு திரைப்படம் தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அவருடன் நடித்தவர் நாகசவுரியா.

இவர் சாய் பல்லவி மீது புகார் கூறியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் சாய் பல்லவி அணைத்து விஷயங்களுக்கும் கோபப்பட்டு முரட்டு தனமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளார். சாய் பல்லவி தற்போது சூர்யா படத்திலும், மாரி 2 படத்தில் நடித்து வருகிறார்.