பாலியல் தொல்லைக்கு ஆளான சனுஷாவிற்கு சசிகுமார் ஆதரவு குரல்


ரேணிகுண்டா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சனுஷா. அதை தவிர கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், சசிகுமாருடன் கொடிவீரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் நேற்று கேரளாவில் ரயிலில் வரும் போது தமிழக இளைஞர் ஒருவர் இவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து கூறிய நடிகை சனுஷா, 'நான் ரயிலில் இரவு உறங்கிக் கொண்டிருக்கும் போது அந்த நபர் என் உதட்டில் கை வைத்து தடவினார். நான் விழித்துக்கொண்டு சத்தம் போட்டேன் ஆனால் யாரும் உதவிக்கு வரவில்லை.' என்று கூறினார்.

இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் நடிகர் சசிகுமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர், 'உதவிக்கு அழைத்தும் யாரும் வராதது மனித தன்மையற்ற செயல் என்று' குறிப்பிட்டுள்ளார்