நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொந்தரவு: தொழிலதிபர் கைது


நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தமிழில் மைனா படம் மூலம் பிரபல நடிகையான அமலா பால் விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். சென்னையில் உள்ள ஒரு நடனப்பள்ளியில் நடன பயிற்சி செய்யும் போது ஒருவர் பாலியல் தொல்லை தரும் விதத்தில் பேசியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மலேசியாவில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தி.நகரில் உள்ள ஒரு டான்ஸ் ஸ்டுடியோவில் பயிற்சி மேற்கொண்டபோது இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிவித்தார்.

சமீபத்தில் சொகுசு கார் வரி ஏய்ப்பு வழக்கில் நடிகை அமலாபால் கேரளா போலீசால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.