சர்ச்சை இயக்குனருடன் இணையும் நயன்தாரா


லட்சுமி என்ற குறும்படத்தை இயக்கியவர் சார்ஜுன். இந்த படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு சிலர் இந்த படத்திற்கு ஆதரவும் பெரும்பாலானோர் இந்த படத்திற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர்.

லட்சுமி படத்தை தொடர்ந்து அவர் இயக்கிய குறும்படம் மா. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது நயன்தாராவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

நயன்தாரா நாயகியாக நடிக்கும் இத்திரைப்படம் திகில் படமாக உருவாகவுள்ளது. இதற்கு முன்பு நயன்தாரா நடிப்பில் வெளியான மாயா திரைப்படம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.