திரிஷா மற்றும் ப்ரியாமணி இணையும் புதிய படம்


மோகினி படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா புதிதாக நடிக்கவுள்ள படம் குற்றப்பயிற்சி. இந்த படத்தில் ப்ரியாமணி முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின் ப்ரியாமணி தமிழில் நடிக்கும் படம் இதுவாகும்.

புதுமுக இயக்குனர் வெர்னிக் இயக்கும் இந்த படத்தில் திரிஷா துப்பறிவாளராக நடிக்கிறார். இந்தியாவின்  முதல் பெண் துப்பறிவாளர் படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

80களில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாகவுள்ளது. ரதன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். விவேக் ஆனந்தன் இந்த படத்தை தயாரிக்கிறார்.