'அறம்' இயக்குனருடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்


கோபி நைனார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளியான திரைப்படம் அறம். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து கோபி நைனார் இயக்கும் அடுத்த படத்தில் நடிப்பதற்கு ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'நாச்சியார்'. 

இப்படம் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதை தொடர்ந்து வெற்றிப்பட இயக்குனருடன் கைகோர்த்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.