2.0 படத்தின் டீஸர் ஆன்லைனில் லீக்கானது: படக்குழு அதிர்ச்சி


ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார் எமி ஜாக்ஸ்ன் ஆகியோர் நடித்த படம் 2.0. எந்திரன் படத்தை போன்று ரோபோவை கதைக்களமாக கொண்ட இந்த படம் எந்திரனின் தொடர்ச்சி இல்லை என்று ஷங்கர் கூறியிருந்தார்.

இந்த படம் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவரும்  என அதன் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. முழுவதும் 3டி கேமராவில் ஷூட்டிங் செய்துள்ளதால் இதன் கிராபிக்ஸ் பணிகள் முடிவடைய தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால் படம் ஏப்ரலில் வெளியாவது சாத்தியமில்லை என்பதால் ஏப்ரலில் ரஜினியின் காலா படத்தை வெளியிட முடிவு செய்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீஸர் இன்று காலை ஆன்லைனில் லீக்கானது.  இது படக்குழுவினருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை பலரும் பகிர்ந்து வருவதால் ட்விட்டரில் #2point0 என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

எங்கோ ஒளிபரப்பட்ட டீசரை யாரோ ஒருவர் மொபைலில் வீடியோ எடுத்து அதை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இருப்பினும் அது கிராபிக்ஸ் பணிகள் முழுமையடையாத டீசர் என்பதால் ரசிகர்கள் ஒரிஜினல் டீசருக்காக காத்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான ரஜினியின் காலா டீசரும் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் லீக்கானது குறிப்பிடத்தக்கது.