அமலா பால் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியீடு


அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் சித்திக் இயக்கிய திரைப்படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். இப்படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் அமலா பால்.

அமலா பால் நடிக்கும் இப்படத்தின் போஸ்டர் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது.  இப்படத்திற்கு அதோ அந்த பறவை போல என்று பெயர் சூட்டியுள்ளனர்.

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை கே.ஆர்.வினோத் இயக்குகிறார். இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படமாக இப்படம் உருவாகிறது.