அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனராகிறார் பிரபுதேவா


அஜித் நடிப்பில் 'சிறுத்தை ' சிவா இயக்கிய படம் விவேகம். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 

இந்நிலையில் அஜித் இயக்குனர் சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார். இந்த படத்திற்கு விசுவாசம் என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டு பின்பு விலகினார். பிறகு டி.இமான் ஒப்பந்தமானார்.

பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களை தொடர்ந்து நயன்தாரா இப்படத்தில் அஜித்தின் ஜோடியாக நடிக்கிறார். விவேகம் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் இந்த படத்திக்கான வேளைகளில் கடினமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் அஜித் பிரபுதேவாவின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. பிரபுதேவாவின் கதை அஜித்திற்கு பிடித்திருந்ததால் அவர் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு முன்பு பிரபுதேவா நடிகர் விஜயின் போக்கிரி,வில்லு ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரபுதேவா தற்போது சார்லி சாப்ளின் 2ஆம் பக்கத்தில் நடித்து வருகிறார்.விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது