நடிகை ஸ்ரீதேவியின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய அஜித்


தமிழ் மற்றும் ஹிந்தி திரையுலகில் 80களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழிலிருந்து ஹிந்திக்கு சென்ற அவர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டில் ஆனார்.

ஹிந்தி திரையுலகில் பெரும் புகழோடு இருந்த அவர் சில நாட்களுக்கு முன்பு திடீரென மரணமடைந்தார். இந்த செய்தி இந்திய திரையுலகினர் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. அவரது இறுதி சடங்குகள் மும்பையில் நடைபெற்றதால் ரஜினி, கமலை தவிர தமிழ் திரையுலகினர் பலரும் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் அவரது 16ஆம் நாள் நினைவு அஞ்சலி சென்னையில் உள்ள அவரது வீட்டில் நேற்று நடைபெற்றது. அதில் நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.