பூஜையுடன் தொடங்கியது சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு 2' படம்


சந்தானம் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான படம் தில்லுக்கு துட்டு. காமெடி ஹாரர் படமாக உருவாகியிருந்த இப்படத்தை ராம் பாலா இயக்கியிருந்தார். சந்தானம், ஷனாயா, கருணாஸ், ஆனந்த ராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

ஓரளவிற்கு வசூலை பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தொடங்கியுள்ளது. இப்படத்தின் பூஜை நேற்று (மார்ச் 1) நடைபெற்றது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக புதுமுகம் தீப்தி நடிக்கிறார்.

முதல் பக்கத்தில் படித்தவர்களில் மொட்டை ராஜேந்திரன் மட்டுமே இப்படத்தில் நடிக்கிறார். சபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். முதல் பாகத்தை போன்றே இப்படமும் ஹாரர் காமெடிய படமாக உருவாகிறது.