விஜய் சேதுபதி நடிக்கும் ஜூங்கா படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது


விஜய் சேதுபதி நடிக்கும் ஜூங்கா படத்தின்  டப்பிங் பணிகள் இன்று தொடங்கியது.

விஜய் சேதுபதி, நேகா சர்மா, சயீஷா,யோகிபாபு மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். கோகுல் இந்த படத்தை இயக்குகிறார். 

விஜய் சேதுபதியே  தயாரிக்கும் இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.