குரங்குடன் ஜீவா நடிக்கும் 'கொரில்லா' படத்தின் வைரல் புகைப்படம்


நடிகர் ஜீவா கலகலப்பு 2 படத்தை தொடர்ந்து தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டான் சாண்டி இயக்குகிறார். இந்த படத்தில் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த ஷாலினி பாண்டே, சதிஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு கொரில்லா என பெயர் சூட்டியுள்ளனர்.

சி.எஸ்.சாம் இசையமைக்கும் இந்த படத்தை ஆல் இன் பிச்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படம் முழு நீல காமெடி படமாக உருவாகிறது. இந்த படத்தில் காங் எனப்படும் சிம்பன்சி குரங்கு ஒன்று நடித்து வருகிறது.

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வந்தது. இன்றுடன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படத்தில் நடித்துவரும் குரங்குடன் நடிகர் ஜீவா இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.