ஐதராபாத்தில் தொடங்குகிறது 'இந்தியன் 2' ஷூட்டிங்


இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் விரைவில் ஐதராபாத்தில் தொடங்கவுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் இந்தியன்.

இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பக்கம் எடுக்கவிருப்பதாக 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் இறுதி நாளன்று அதிகார பூர்வமாக அறிவித்தனர். அதன் பிறகு அதை பற்றிய பேச்சுக்கள் இல்லாமல் போனது.

தற்போது தைவானில் இருக்கும் ஷங்கர் அங்கு 'இந்தியன் 2' என்ற ஏர் பலூன் ஒன்றை பறக்கவிட்டுள்ளார். இதன் மூலர் இந்தியன் 2 விரை தொடங்கவிருப்பதை உறுதி படுத்தியுள்ளார் ஷங்கர். இந்நிலையில் இந்த படத்தில் நடிகை நயன்தாரா தைரியமான ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வருகின்றன. இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் ஐதராபாத்தில் தொடங்கவுள்ளது.