'இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு 'ஏ' சான்றிதழ்: ரிலீஸ் எப்போது ?


'ஹரஹர மகாதேவகி' படத்தை இயக்கியவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். அவர் அடுத்ததாக இயக்கம் படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'.

இந்த படத்தில் கெளதம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். 'சக்க போடு போடு ராஜா' படத்தில் நடித்த வைபவி, சந்திரிகா, சதிஷ்  மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

பாலமுரளி பாலு இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 'ஹரஹர மகாதேவகி' படத்திற்கு இளைஞர்கள் வரவேற்பு இருந்ததை தொடர்ந்து இந்த படமும் அதே பாணியில் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு சென்சாரில் 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.