ஒரே நாளில் 1கோடி பார்வையாளர்களை கடந்த காலா படத்தின் டீஸர்


கபாலி வெற்றியை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் காலா. இந்த படத்தில் ஹுமா குரோஷி, நானா படேக்கர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் டீஸர் மார்ச் 2ஆம் தேதி 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்றிரவே சிலர் இணையத்தில் காலா படத்தின் டீசரை லீக் செய்துவிட்டனர். வேறு வழியின்றி படக்குழுவினரும் டீசரை நேற்றிரவே வெளியிட்டனர்.

இருப்பினும் காலா படத்தின் டீஸர் சாதனை படைத்தது வருகிறது. 21 மணி நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் சேர்த்து 1 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. தமிழில் மட்டும் ஒரு நாளில் 1கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.