முன்கூட்டியே லீக்கான 'காலா' டீசர்: கடுப்பில் ரசிகர்கள்


கபாலி வெற்றியை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் காலா. இந்த படத்தில் ஹுமா குரோஷி, நானா படேக்கர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் டீஸர் வரும் நேற்று (மார்ச் 1) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காஞ்சி சங்கராச்சாரியார் காலமானதை தொடர்ந்து டீஸர் மார்ச் 2ஆம் தேதி 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நேற்றிரவே சிலர் இணையத்தில் காலா படத்தின் டீசரை லீக் செய்துவிட்டனர். வேறு வழியின்றி படக்குழுவினரும் டீசரை நேற்றிரவே வெளியிட்டனர். 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் பலரும் உறங்கிவிட்டனர். அறிவித்த நேரத்திற்கு முன்பே வெளியானதால் டீசர் செய்ய வேண்டிய ஒரு சில சாதனைகளை தவறவிட்டது. இதனால் ரசிகர்கள் கடுப்பில் இருக்கின்றனர்.