தொடங்கியது கார்த்தியின் அடுத்த படம்: பூஜை படங்கள் உள்ளே


பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் கார்த்தி நடிக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் அடுத்த படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. 

பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லஷ்மண்குமார் தயாரிக்கும் இப்படத்தில் கார்த்தி ரகுல் பிரீத் சிங், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார். 

கார்த்தியும் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை புதுமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்குகிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 8-ம் தேதி சென்னையில் ஆரம்பமாகிறது.