சூர்யா நடிக்கும் 'NGK' படத்தின் மற்றோரு போஸ்டரை வெளியிட்டார் செல்வராகவன்


நடிகர் சூர்யா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் படம் தானா சேர்ந்த கூட்டம். அந்த படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கித்தில் நடிக்கிறார் சூர்யா. 

இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு நடிகைகள் நடிக்கின்றனர்.   இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட ஷூட்டிங் தஞ்சாவூரில் நடைபெறவுள்ளது. படத்திற்கு 'NGK' என்று பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. தற்போது இந்த போஸ்டரின் மற்றோரு வடிவத்தை வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.