இன்று தொடங்குகிறது 'நாடோடிகள் 2' படப்பிடிப்பு


சமுத்திரக்கனி இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் நாடோடிகள். நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மாபெரும் வசூலை பெற்றுத்தந்தது.

சசிகுமார், விஜய் வசந்த், 'பிக்பாஸ்' பரணி, அனன்யா மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். அதன் பிறகு போராளிகள் படத்தில் சமுத்திரகனி இயக்கத்தில் நடித்தார் சசிகுமார். 

தற்போது மூன்றாவது முறையாக  நாடோடிகள் இரண்டாம் பாகத்தில் சமுத்திரகனி இயக்கத்தில் நடிக்கிறார் சசிகுமார். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக அஞ்சலி நடிக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.  இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.