'குற்றம் 23' பட இயக்குனருடன் இணையும் நயன்தாரா


வேலைக்காரன் படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் கோலமாவு கோகிலா படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து 'ஈரம்' அறிவழகன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை 'அறம்' படத்தை தயாரித்த ராஜேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு 'லட்சுமி' குறும்படத்தை இயக்கிய சர்ஜுன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் நயன்தாரா. இத்திரைப்படம் திகில் படமாக உருவாகவுள்ளது. 

இப்படத்திற்கு பிறகு நயன்தாரா அறிவழகன் இயக்கத்தில் நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தேதி அறிவிக்கப்படவுள்ளது.