ஜெய் நடிக்கும் 'நீயா 2' படத்தின் போஸ்டர் வெளியீடு


கமல்ஹசன், ஸ்ரீபிரியா, முத்துராமன், மஞ்சுளா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த படம் நீயா. 1979ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தின்  இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. 

இப்படத்தில் ஜெய், லட்சுமி ராய், வரலட்சுமி, சரத்குமார், கேத்தரின் தெரசா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் லட்சுமி ராய் பாம்பாக நடிக்கிறார்.

எத்தன் படத்தை இயக்கிய சுரேஷ் இப்படத்தை இயக்குகிறார். கணவனை கொலை செய்தவர்களை பழிவாங்கும் இச்சாதாரி நாகத்தை பற்றிய கதையே நீயா முதல் பாகம். அதைப்போன்றே பாம்பை பற்றிய கதைக்களமே இந்த படத்திலும் இருக்கிறது. இப்படத்தில் லட்சுமி ராய் மூன்று கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.