ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தின் இசையமைப்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு


காலா படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை பீட்ஸா, ஜிகர்தண்டா படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ரஞ்சித் இயக்கத்தில ரஜினிகாந்த் நடித்துள்ள படம் காலா. இப்படம் வரும் ஏப்ரலில் வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் 2.0  படமும் ரிலீசுக்கு தயாரகவுள்ளது.  இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்தார்.

அரசியலில் இறங்குவதற்கு முன்பு அரசியல் கதையம்சம் கொண்ட படத்தில் நடிப்பதற்காக அட்லீ, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரிடம் கதை கேட்டு வந்தார். சில நாட்களுக்கு முன் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து அறிவிப்பை சன் பிச்சர்ஸ் இன்று வெளியிட்டுள்ளது.