ஃபேஸ் புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் அதிகாரபூர்வமாக இணைந்தார் ரஜினிகாந்த்


தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். இதுவரை ட்விட்டரில் மட்டும் கணக்கு வைத்திருந்த ரஜினிகாந்த் தற்போது ஃபேஸ் புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் காலா மற்றும் 2.0 படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ளன அடுத்ததாகா கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படி ஒரு பக்கம் சினிமா மறுபக்கம் அரசியல் என ரசிகர்களை உற்சாகம் குறையாமல் வைத்திருக்கிறார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ரஜினியின் புதிய கணக்குகளால் ரசிகர்கள் மேலும் உற்சாகத்துடன் உள்ளனர். கணக்கு தொடங்கிய ஒரே நாளில் ஃபேஸ் புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரஜினியை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடருகின்றன.

ரஜினிகாந்தின் புதிய கணக்குகளை பின்தொடர கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்