'நடோடிகள் 2' வை தொடர்ந்து மீண்டும் ஒரு வெற்றிப் படத்தின் 2ஆம் பாகத்தில் சசிகுமார்


சமுத்திரக்கனி இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் நாடோடிகள். நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மாபெரும் வசூலை பெற்றுத்தந்தது. தற்போது 2ஆம் பாகத்தில் சமுத்திரக்கனி இயக்கத்தில் நடித்து வருகிறார் சசிகுமார்.

நாடோடிகள் 2 வை தொடர்ந்து அடுத்ததாக சுந்தரபாண்டியன் 2ஆம் பாகத்திலும் நடிக்கவிருக்கிறார் சசிகுமார். கடந்த 2012ஆம் ஆண்டு சசிகுமார், லட்சுமி மேனன், விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் நடிப்பில் அறிமுக இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிய திரைப்படம் சுந்தரபாண்டியன்.

நட்பையும் காதலையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது எடுக்கவுள்ளனர். விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.