பாகுபலிக்கு பிறகு மீண்டும் சரித்திரப்படத்தில் நடிக்கும் சத்யராஜ்


ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் பாகுபலி. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தில் கட்டப்பா கேரக்டரில் நடித்த  சத்யராஜின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சத்யராஜ் மீண்டும் ஒரு சரித்திரப்படத்தில் நடிக்கவுள்ளார். மலையாள நடிகர் பிரகாஷ்ராஜ் நடிக்கும் காளியன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். 

3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த காளி என்ற போர்வீரன் கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடிக்கிறார். இதற்கு முன்பு 'கண்ணாமூச்சி ஏனடா' என்ற படத்தில் பிரித்விராஜ், சத்யராஜ் இருவரும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.