முதல் முறையாக லண்டன் மியூசியத்தில் தமிழ் நடிகரின் மெழுகு சிலை


லண்டலினில் உள்ள பிரபல மியூசியம் 'madame tussauds'. இங்கு முதல்முறையாக தமிழ் நடிகர் ஒருவருக்கு மெழுகு சிலை அமைக்கவுள்ளனர். 

பாகுபலி படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்றவர் நடிகர் சத்யராஜ். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், ராணா சத்யராஜ் ஆகியோர் நடித்த படம் பாகுபலி. இப்படத்தில் சத்யராஜ் நடித்த கட்டப்பா கேரக்டர் அனைவரையும் கவர்ந்தது.

அனைவரின் பாராட்டுக்களையும் பெற்ற அவருக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் லண்டன் மியூசியத்தில் கட்டப்பா கேரக்டரின் சிலையை அமைக்கவுள்ளனர். இதுவரை சச்சின், ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுக்கு மட்டுமே இதுவரை அங்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தமிழ் நடிகருக்கு அங்கு சிலை வைக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.