ஆன்லைனில் டீஸர் லீக்காவது பற்றி இயக்குனர் சங்கரின் கருத்து: 'ஐ' படத்தின் போது ஷங்கர் தெரிவித்த கருத்து


ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார் எமி ஜாக்ஸ்ன் ஆகியோர் நடித்த படம் 2.0. எந்திரன் படத்தை போன்று ரோபோவை கதைக்களமாக கொண்ட இந்த படம் எந்திரனின் தொடர்ச்சி இல்லை என்று ஷங்கர் கூறியிருந்தார்.

இந்த படம் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவரும்  என அதன் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. முழுவதும் 3டி கேமராவில் ஷூட்டிங் செய்துள்ளதால் இதன் கிராபிக்ஸ் பணிகள் முடிவடைய தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால் படம் ஏப்ரலில் வெளியாவது சாத்தியமில்லை என்பதால் ஏப்ரலில் ரஜினியின் காலா படத்தை வெளியிட முடிவு செய்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீஸர் இன்று காலை ஆன்லைனில் லீக்கானது.  இது படக்குழுவினருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை பலரும் பகிர்ந்து வருவதால் ட்விட்டரில் #2point0 என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

எங்கோ ஒளிபரப்பட்ட டீசரை யாரோ ஒருவர் மொபைலில் வீடியோ எடுத்து அதை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்நிலையில் 'ஐ' படத்தின் டீஸர் லீக்கான போது அதுபற்றி கருத்து தெரிவித்திருந்தார் இயக்குனர் சங்கர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் 'டீஸர் லீக் அனால் அது பப்ளிசிட்டி தான். லீக் ஆகவில்லை என்றால் அது அது ரகசியம். மற்றபடி அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை' என்று தெரிவித்திருந்தார்.