சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் அருண்ராஜா காமராஜ்


சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். வெள்ளித்திரையில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட சிவகார்த்திகேயன் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார். சிவகார்த்திகேயன் ஒரு புதிய படத்திற்க்கு தயாரிப்பாளராக உருவாகியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இந்த படத்தை சிவகார்த்திகேயன் நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். இவர் ராஜா ராணி, மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். கபாலி படத்தின் நெருப்புடா பாடலை பாடியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அருண்ராஜா முதன் முதலாக இயக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், இளவரசு, தர்ஷன் ஆகியோர் நடிக்கின்றனர். பெண்கள் கிரிக்கெட் பற்றிய கதைக்களம் கொண்ட படம் என்பதால் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.