அருண் விஜய் நடிக்கும் 'தடம்' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது: ரிலீஸ் தேதி அறிவிப்பு


மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வெளிவந்த படம் தடையற தாக்க. இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், மம்தா மோகன்தாஸ், வம்சி கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் வசூலில் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மீண்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கிறார் அருண் விஜய். இந்த படத்திற்கு தடம் என பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் வித்யா பிரதீப் நடிக்கிறார். அருண் ராஜ் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் வரும்  ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று ரிலீஸ் ஆகவுள்ளது.