தீயாகப் பரவும் விஜய், அஜித் புகைப்படங்கள்: ட்ரெண்டிங்கில் தல தளபதி


மெர்சல் படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயர் சூட்டப்படாத படத்தில் நடித்து வருகிறார் விஜய். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிவருகின்றன.

இவைதவிர நடிகர் அஜித்தின் புகைப்படமும் இணையத்தில் வைரலாகிவருகிறது. நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சியில் இருப்பதுபோன்ற அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாகப்பரவுகிறது. இப்படங்களை விஜய் அஜித் ரசிகர்கள் போட்டி போட்டு ஷேர் செய்கின்றனர்.