அனைவரும் எதிர்பார்த்த தனுஷின் வடசென்னை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்


வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. 

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். 

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டது. பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்திருக்கிறார் தனுஷ்.