விஜய் 62வில் இணைந்த பிரபல நடிகை: மற்ற நடிகர்களும் அறிவிப்பு


சமீபத்தில் விஜய் நடித்து வெளியான மெர்சல் படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். அந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பதற்கு வரலட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். அவரை தவிர ராதாரவி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த அறிவிப்பை சன் பிக்ச்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.