YouTube நிறுவனமே வாழ்த்திய காலா டீஸர்: கெத்து காட்டும் காலா


கபாலி வெற்றியை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் காலா. இந்த படத்தில் ஹுமா குரோஷி, நானா படேக்கர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் டீஸர் மார்ச் 2ஆம் தேதி 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்றிரவே சிலர் இணையத்தில் காலா படத்தின் டீசரை லீக் செய்துவிட்டனர். வேறு வழியின்றி படக்குழுவினரும் டீசரை நேற்றிரவே வெளியிட்டனர். இருப்பினும் காலா படத்தின் டீஸர் 50லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது வருகிறது. 

இந்நிலையில் காலா படத்தின் டீசருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் யூ-டியூப் நிறுவனமே தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. கருப்பு உடையில் ரஜினி இருக்கும் புகைப்படத்தையும் டீஸர் link கையும் குறிப்பிட்டு இந்த ஹோலிப்பண்டியில் கருப்பு தான் பேவரிட் கலர் என்று குறிப்பிட்டுள்ளது.