வைரலாகும் காலா படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்


கபாலி வெற்றியை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் காலா. இந்த படத்தில் ஹுமா குரோஷி, நானா படேக்கர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்றுவருகிறது. 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதமாவதால் காலா படத்தை முதலில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த படத்தின் டீஸர் வரும் இன்று (மார்ச் 1) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காஞ்சி சங்கராச்சாரியார் காலமானதை தொடர்ந்து டீஸர் நாளை (மார்ச் 2) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது காலா படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.