அதர்வா படத்தில் இணைந்த 'மேயாத மான்' இந்துஜா


ஆர்.கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான படம் இவன் தந்திரன். ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆர்.ஜே.பாலாஜி நடித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கண்ணன் தனது அடுத்த படத்தில் அதர்வாவை இயக்கவுள்ளார். இந்த படத்தின் நாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'அர்ஜுன் ரெட்டி' படத்திற்கு இசையமைத்த ரதன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் . இந்த படத்திற்கு பூமராங் என பெயர் சூட்டியுள்ளனர். இந்த படத்தில் சதீஷ் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டார்.

இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு 'மேயாத மான்' படத்தில் தங்கச்சி கேரக்டரில் நடித்த இந்துஜா ஒப்பந்தமாகியுள்ளார்.