பிரபு தேவா, சந்தானம், ராஜேஷ் இணையும் புதிய படம்


நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படத்தை 'சிவா மனசுல சக்தி' புகழ் ராஜேஷ் இயக்குகிறார். இப்படத்தை நடன இயக்குனர் பிரபுதேவாவும் இணைந்து தயாரிக்கிறார்.

கடவுள் இருக்கான் குமாரு படத்திற்கு பிறகு இயக்குனர் ராஜேஷ் தனது அடுத்த படத்திற்கான கதையை தயாரித்து வந்தார். இப்போது அந்த கதையை கேட்டு நடிகர் சந்தானம் நடிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. பிறகு அந்நிறுவனம் விலகியதால் ஐசரி கணேஷ் மற்றும் பிரபுதேவா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.