மூன்றாவது முறையாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா: அதிகாரபூர்வ அறிவிப்பு


தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. சாய் பல்லவி,ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சூர்யா செல்வராகவன் படத்தையடுத்து கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக தெரிவித்தார். இதன் மூலம் கே.வி.ஆனந்த் சூர்யா கூட்டணி உறுதியானது.

இன்று இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் கே.வி.ஆனந்த் ட்விட்டரில் இது பற்றி அறிவித்துள்ளார்.  அயன், மாற்றான் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.