அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன் !


வெள்ளித்திரை போலவே சின்னத்திரையிலும் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நாளில் ஒளிபரப்பாகும் போது டிஆர்பி ரேட்டிங்கை பெறுவதில் கடும் போட்டி நிலவும். 

அந்த வகையில் இந்தமுறை அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் மோதுகின்றன. வரும் மே தினத்தன்று சன் டிவியில் அஜித் நடித்த விவேகம் படமும், விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படமும் ஒளிபரப்பாகின்றன.

இவ்விரு படங்களும் ஒரே நேரத்தில் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாவதால் யார் வெற்றி பெறுவார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அது மட்டுமின்றி அன்று அஜித்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.